அட..கம்பீரமான பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தானா! தீயாய் பரவும் தகவல்! செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!bollywood-actor-sasho-owns-bigboss-tamil-voice

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2006ஆம் ஆண்டு இந்தியில் தொடங்கப்பட்டு இதுவரை 13 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி கன்னடம் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் என பல மொழிகளிலும் தொடங்கப்பட்டது

தமிழில் 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து  இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன் முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 4ல் ஆரி வெற்றியாளரானார்.

          sasho

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை  பெருமளவில் கவரந்தது பிக்பாஸ்ஸின் கம்பீரமான குரல்தான். இந்த குரலுக்கெனவே ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் ஹவுஸ்மேட்டுக்களை மிரட்டி, கண்டித்து, கிண்டல் செய்யும்  இத்தகைய குரலுக்கு சொந்தக்காரர் யார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் இருந்த நிலையில் தற்போது அந்த குரல் பாலிவுட் நடிகர் சாஷோ எனும் சச்சிதானந்ததுடையது என தகவல்கள் பரவி வருகிறது.