அண்ணாத்த படத்தில் இணையும் பிரபல விஜய், விக்ரம் படம் நடிகர்! இவர்தான் வில்லனோ.. வெளிவந்த அறிவிப்பு!

அண்ணாத்த படத்தில் இணையும் பிரபல விஜய், விக்ரம் படம் நடிகர்! இவர்தான் வில்லனோ.. வெளிவந்த அறிவிப்பு!


bollywood-actor-join-annatthe-movie

விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் அண்ணாத்த. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் அண்ணாத்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்ய, இமான்  இசையமைத்துள்ளார். இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அபிமன்யு சிங் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 இவர் இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளிவந்த வேலாயுதம், தலைவா விக்ரம் நடித்த ’பத்து எண்றதுக்குள்ள’ மற்றும் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் அண்ணாத்த படத்திலும் அவர் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.