பிரபல முன்னணி பாலிவுட் நடிகரின் சகோதரர் திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்!

பிரபல முன்னணி பாலிவுட் நடிகரின் சகோதரர் திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்!


bollywood-actor-ajay-devkan-brother-died

பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் அஜய் தேவ்கன்.  இவரது சகோதரர் அனில் தேவ்கன். இவர் அவரது சகோதரர் நடித்த ராஜு ஜாஜா, பிளாக்மெயில் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார்.

அதுமட்டுமன்றி அவர் ஜான், பியார் டு ஹோனா ஹய் தா, சன் ஆஃப் சர்தார் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராகவும்  பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் 45 வயது நிறைந்த அனில் தேவ்கன்  உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ajay devkan

இந்நிலையில் தனது சகோதரனின் திடீர் மரணம் குறித்து அஜய் தேவ்கன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  எனது சகோதரனின் மரணம் எங்கள் குடும்பத்தினரின் இதயத்தை நொறுங்க செய்துள்ளது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இறுதி அஞ்சலி கூட்டம் நடத்தப்படவில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார். இந்நிலையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அனில் தேவ்கனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.