அட்லியை மீண்டும் வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறனை திட்டி கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள்..



Blue sattai Maran posted about atlee

ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கியிருக்கும் படம் 'ஜவான்'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில், படத்தில் நடித்த அனைவரும் தங்களுக்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

atlee

அந்த வகையில் நேற்று விழாவில் பேசிய நடிகர் யோகி பாபு, "இயக்குனர் அட்லீ எல்லா இடத்திலும் மிகுந்த ஆளுமை கொண்டவர். தமிழில் எப்படியோ, ஹிந்தியிலும் அப்படியே மிகுந்த ஆளுமையாக உள்ளார். அட்லீ ஹாலிவுட்டுக்கு போனாலும், அங்கும் இதே ஆளுமையுடன் இருப்பார்" என்று பேசினார்.

இந்நிலையில், எப்போதும் அட்லீயை சீண்டிக் கொண்டிருக்கும் ப்ளூ சட்டை மாறன், யோகி பாபுவின் இந்த பேச்சால் மீண்டும் அட்லீயை வம்புக்கு இழுத்துள்ளார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் " சும்மா இருங்க ப்ரோ. அங்க போனா நான் யாருன்னு கண்டுபிடிச்சுருவாங்க" என்று ஒரு பதிவிட்டுள்ளார்.

atlee

முன்னதாக, திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், அட்லீயின் ஆரம்பகாலங்களில் இருந்தே, அட்லீயின் படங்கள் ஏற்கனவே வந்த ஏதோ ஒரு படத்தின் சாயலில் இருப்பதாக அட்லீயை விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.