சினிமா

பிளாக் பேந்தர் நாயகன் சாட்விக் போஸ்மேன் மரணம்! சோகத்தில் மூழ்கிய ஹாலிவுட் திரையுலகம்!

Summary:

Black Panther star Chadwick Boseman died

2003ம் ஆண்டு Third Watch என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் தான் சாட்விக் போஸ்மேன். அதன் பிறகு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வந்த இவர் 2008ம் ஆண்டு வெளியான The Express என்ற படத்தின் மூலம் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தார்.

2017ஆம் ஆண்டு சாட்விக் போஸ்மேனை வைத்து ‘பிளாக் பேந்தர்’ கதாபாத்திரத்துக்காகவே ஒரு படத்தை தயாரித்தது மார்வெல் நிறுவனம். படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் உலகம் முழுவதுமுள்ள மார்வெல் ரசிகர்களின் மனதில் பிளாக் பேந்தராகவே பதிந்தார் போஸ்மேன்.  ‘பிளாக் பேந்தர்’ கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பல விருதுகளையும், ஒட்டுமொத்த கருப்பின மக்களின் பாராட்டுக்களையும் ஆதரவையும் பெற்றிருந்தார் சட்விக் போஸ்மேன். 

புற்றுநோய் பாதிப்புக்காக கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார் நடிகர் சட்விக் போஸ்மேன். ஆனால், அதனை வெளிப்படையாக அவர் அறிவித்ததே இல்லை என அவரது குடும்பத்தினர் தற்போது தெரிவித்துள்ளனர். பெருங்கடல் புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த பிரபல ஹாலிவுட் நடிகர் சட்விக் போஸ்மேன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். 


Advertisement