யூடியூபில் இரண்டாம் இடத்தை பிடித்த பிகில் டிரைலர்! முதல் இடத்தில் இந்த முன்னணி நடிகரின் படமா! வெளியான புதிய தகவல்

யூடியூபில் இரண்டாம் இடத்தை பிடித்த பிகில் டிரைலர்! முதல் இடத்தில் இந்த முன்னணி நடிகரின் படமா! வெளியான புதிய தகவல்


Bigil trailer zero movie

தளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு மாஸாக வெளியாகவுள்ள திரைப்படம் தான் பிகில். இயக்குனர் அட்லீ இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வெளியான பிகில் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வெளியான சில மணித்துளிகள் பல லட்சம் லைக்குகளை பெற்றாலும் யூடியூபில் டிரைலர் சாதனையில் இரண்டாம் இடத்தை மட்டுமே பெற்றுள்ளது. 

Bigil

மேலும் முதல் இடத்தில் அதிக லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ள படம் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ஜீரோ படம் தான். இதன் காரணமாக பிகில் டிரைலர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.