சினிமா

பிகில் ட்ரைலர் படைத்த மாபெரும் சாதனை! படக்குழு அறிவித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு - உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்

Summary:

Bigil trailer 25 million views

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள திரைப்படம் தான் பிகில். இயக்குனர் அட்லீ நடிகர் விஜயை வைத்து மூன்றாவது முறையாக உருவாகியுள்ள இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்றாலும் ரசிகர்கள் தற்போது முதல் ஆங்காங்கு கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் இந்த படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலு‌ம் ஏ. ஜ. எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் கால் விளையாடும் பெண்களின் கோச்சாக நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கடந்த சனிக்கிழமை வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வரை இப்படத்தின் டிரெய்லர் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.


Advertisement