அடேங்கப்பா! உலகம் முழுவதும் பிகில் படம் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?

Bigil movie releasing around 4200 theaters world wide


Bigil movie releasing around 4200 theaters world wide

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய், நயன்தாரா நடித்திருக்கும் பிகில் திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் பிகில் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக உள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் சுமார் 4000 முதல் 4200 திரைகளில் பிகில் படம் வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. மேலும், படம் வெளியாவதற்கு முன்பே கிட்டத்தட்ட 136 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டதாகவும், படம் வெளியீட்டிற்கு முன்பாக அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் பிகில் 2 ஆவது இடம் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Bigil

மேலும், பிகில் படத்தை சீனாவில் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாகவும், சீனாவில் பிகில் படம் வெளியான பிறகே தங்களது அடுத்த படத்தின் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.