மாஸாக களமிறங்கும் பிக்பாஸ் சீசன் 6.. டஃப்க்கே டஃப் கொடுக்கப்போகும் விஜய் டிவி..! எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்..!!BiggBoss Tamil Season 6

பிக்பாஸ் நிகழ்ச்சி முதன்முதலாக ஹிந்தியில் ஒளிபரப்பப்பட்டது. அதனை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக விஜய் தொலைக்காட்சி, தமிழ்மொழியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை அறிமுகம் செய்தது. இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், கடந்த ஆண்டுடன் 5 சீசன் முடிவடைந்தது. 

தற்போது பிக்பாஸ் சீசன் 6-க்கான முதற்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், 5 சீசன் வரை கமல் தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் அல்டிமேட் ஓடிடியில் ஒளிபரப்பப்பட்டபோது, அதனை சிம்பு தொகுத்து வழங்கினார். தற்போது பிக்பாஸ் சீசன் 6-ஐ கமலே தொகுத்து வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

biggboss

மேலும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யும் பணியும் தொடங்கிவிட்ட நிலையில், கடந்த 5-ஆம் சீசனுக்கு மக்களிடம் வரவேற்பு சற்று குறைந்ததால், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது கூடுதல் கவனம் செலுத்த விஜய்டிவி தரப்பு தயாராகி இருப்பதாகவும் தெரிய வருகிறது. 

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்.