சினிமா Bigg Boss

பிக்பாஸ் வேல்முருகனின் மனைவி மற்றும் குழந்தைகளை பாத்துருக்கீங்களா? எப்படி இருக்காங்கன்னு பாருங்க.! வைரல் புகைப்படம்.

Summary:

பிக்பாஸ் சீசன் நான்கில் விளையாடிவரும் பிரபல பாடகர் வேல்முருகன் அவர்களின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

பிக்பாஸ் சீசன் நான்கில் விளையாடிவரும் பிரபல பாடகர் வேல்முருகன் அவர்களின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் நான்கு தற்போது மிகவும் பரபரப்புடன் நடந்துவருகிறது. வழக்கம்போல் இந்த சீசனிலும் சண்டை, சமாதானம், அழுகை என பிக்பாஸ் வீடு காரசாரமாக உள்ளது. இதனிடையே கடந்த வாரம் நடிகை ரேக்கா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தற்போது தொகுப்பாளினி அர்ச்சனாவுடன் சேர்த்து 16 பேர் விளையாடிவருகின்றனர். இந்த 16 பேரில் ஒருவர்தான் பாடகர் வேல்முருகன். தமிழ் சினிமாவில் மாபெரும் ஹிட்டடித்த ஏராளமான பாடல்களை பாடியுள்ள பெருமை இவருக்கு உள்ளது. நாட்டுப்புறப்பாடலைப் பாடுவதில் வல்லவரான இவருக்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளமும் உள்ளது.

தற்போது பிக்பாஸ் வீட்டில் விளையாடிவரும் இவர் சென்னையை சேர்ந்த கலா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு தற்போது இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். இதுவரை பெரிதாக இணையத்தில் வெளிவராத இவர்களின் அழகான குடும்பப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement