சினிமா

இதனால்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது? உண்மையை கூறிய தாடி பாலாஜி!

Summary:

Bigg boss thadi balaji talks about bigg boss chance

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், பிரபலதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிக்கு  நடுவராகவும் இருப்பவர் தாடி பாலாஜி. இவர் சமீபத்தில்  கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே நடந்த குடும்ப சண்டை தமிழகம் முழுவதும் தெரியவந்தது. இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கணவன் மனைவி இருவரும் கலந்துகொண்டனர். இடஙக நிகழ்ச்சி இவர்கள் இருவரையும் ஒன்றாக சேர்க்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். 

அதேபோலவே இருவரும் ஒருவழியாக சமாதானமானதாக காட்டப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தாடி பாலாஜி மீண்டும் தாய் மதமான இந்து மதத்திற்கு மாறியதாக செய்திகள் வந்தது.

இதற்கு பதில் அளித்த தாடி பாலாஜி, இது முற்றிலும் தவறான தகவல் என கூறியுள்ளார். மேலும் ”நான் மதம் மாறவில்லை என்றும் எனக்கு சித்தர்கள் மீது ஆர்வம் அதிகம்.

அவர்கள் என் வாழ்வில் பல அற்புத விஷயங்களை செய்துள்ளனர். திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தரை சந்தித்த பிறகுதான் எனக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது” என பாலாஜி தெரிவித்துள்ளார்.


Advertisement