சினிமா Bigg Boss

முடிந்தது பிக்பாஸ்.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் அறிவிப்பு.. மகிழ்ச்சி ஆரவாரத்தில் ரசிகர்கள்..

Summary:

கடந்த 100 நாட்களுக்கு மேலாக ஒலிபராகிவந்த பிக்பாஸ் சீசன் நான்கு நிறைவடைந்தநிலையில் இந்த சீசனின் வெற்றியாளரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 100 நாட்களுக்கு மேலாக ஒலிபராகிவந்த பிக்பாஸ் சீசன் நான்கு நிறைவடைந்தநிலையில் இந்த சீசனின் வெற்றியாளரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

18 பிரபலங்கள் கலந்துகொண்ட பிக்பாஸ் சீசன் நான்கு நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவந்தநிலையில் இந்த சீசனின் வெற்றியாளராக ஆரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிக்பாஸ் போட்டியின் ஃபினாலே நிகழ்ச்சி நேற்று மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசி 5 போட்டியாளர்களில் இருந்து ஒவொருவராக வெளியேற்றப்பட்டநிலையில் ரியோ மூன்றாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து ஆரி மற்றும் பாலாஜி இருவரும் மீதமிருந்தநிலையில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி என கமலஹாசன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதனை அடுத்து அவருக்கு வெற்றிக்கான கோப்பை வழங்கப்பட்டதோடு, 50 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. கடந்த 100 நாட்களுக்கும் மேலாக மிகவும் நேர்மையுடன் விளையாடிவந்த நடிகர் ஆரிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என அவரது ரசிகர்கள் அவரை கொண்டாடிவருகின்றனர்.

மேலும் பிக்பாஸ் சீசன் நான்கின் வெற்றியாளராக ஆரிக்கு சக போட்டியாளர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.


Advertisement