சினிமா Bigg Boss

பிக்பாஸ் சீசன் நான்கில் முதல் முறையாக ஏற்பட்ட அதிரடி மாற்றம்.. விஜய் டிவி அறிவிப்பு.. என்ன தெரியுமா?

Summary:

புது சீரியல்களின் வரவால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவந்த நேரம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.

புது சீரியல்களின் வரவால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவந்த நேரம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளநிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் நான்கு ஒளிபரப்பாகிவருகிறது. 16 போட்டியாளர்கள், 2 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என பரபரப்பாக தொடங்கிய பிக்பாஸ் சீசன் நான்கு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது 7 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த போட்டியாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாலும், புது தொடர்களின் வருகையாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவந்த நேரம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

முன்னதாக இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றில் இருந்து இரவு 10 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இரவு 9.30  மணிக்கு ராஜா ராணி 2 தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. அதேபோல மாலை 6.30 மணிக்கு பாவம் கணேசன் என்ற புது தொடரும் இன்றில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது.


Advertisement