கடைசி நாளில் கசிந்த தகவல்.. இந்தவாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது இவர்தான்.. யார் தெரியுமா?Bigg boss tamil season 4 sanam shetti evicted

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேற்றப்பட்டுள்ளது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 61 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. வழக்கமான சீசன்களை போல இந்த சீசனிலும் சண்டை, சமாதானம், அழுகை என பிக்பாஸ் வீடு காரசாரமாக உள்ளது. ஆனால் இந்த முறை லவ் டிராக் பெரிதாக சூடுபிடிக்கவில்லை.

bigg boss tamil

இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மீதமிருக்கும் 13 பேரில் இந்த வாரம் ஆரி, அனிதா, சனம், நிஷா, ரம்யா, ஆஜித், ஷிவானி ஆகிய 7 பேரும் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இந்த 7 பேரில் நடிகை சனம் ஷெட்டி குறைவான வாக்குகளை பெற்று இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.

bigg boss tamil