சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த பிக்பாஸ் ஆராவின் திருமணம்.! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ.!

சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த பிக்பாஸ் ஆராவின் திருமணம்.! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ.!


bigg-boss-tamil-season-1-winner-arav-nafeez-gets-marrie

பிக் பாஸ் தமிழ் சீசன் 1 வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்ட நடிகர் ஆரவ் நஃபீஸ் நடிகை ராஹி என்பவரை நேற்று (செப்டம்பர் 6) திருமணம் செய்துகொண்டார்.

சென்னையில் இவர்களது திருமணமானது அரசாங்க விதிகள் மற்றும் விதிமுறைகளை கடைபிடித்து தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் நடைபெற்றது. விழாவில் பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர்கள் - சினேகன், காயத்ரி ரகுராம், பிந்து மாதவி, ஹரதி, ஹரிஷ் கல்யாண் மற்றும் சுஜா வருணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Bigg boss

புகழ்பெற்ற இயக்குனர்களான கே.எஸ்.ரவிக்குமார், சரண், விஜய், ரஞ்சித் ஜெயகோடி ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிக்பாஸ் போட்டியில் இருக்கும்போது நடிகர் ஆரவ் மற்றும் ஓவியா இடையே காதல் சர்ச்சைகள் எழுந்தநிலையில், அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் நடிகர் ஆரவ் மற்றும் நடிகை ராஹி இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்துவந்தநிலையில் தற்போது இருவரும் தங்கள் பெற்றோரின் ஒப்புதலுக்குப் பிறகு திருமணம் செய்து செய்துள்ளனர். திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை பிந்து மாதவி திருமணத்தில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Bigg boss