மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
ஆயிஷாவை கண்கலங்கவைத்த அசல் கோலார்.. செல்லமாக சொன்னது குத்தமா?.. கலங்கவைக்கும் பிக்பாஸ்..!
பிக்பாஸ் சீசன் 6 விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த போட்டியில் தனலட்சுமி, விஜே கதிர்ராவன், மணி சந்திரா, மகேஸ்வரி, அமுதவாணன், விக்ரமன், ஷாந்தி, ஜனனி, ஏடிகே, ஷெரின், ரக்ஷிதா மகாலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், ஆயிஷா, ஷிவின் கணேசன், அஷீம், ஜிபி முத்து உட்பட 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் சத்யாவை பாடகர் அசல் கோலார், "நீங்கள் என்னை வாடா போடா என அழைப்பது எனக்கு பிடிக்கவில்லை. நீங்கள் அவ்வாறு அழைக்க வேண்டாம்" என கண்டிக்கிறார். இதனைக்கேட்ட சத்யா @ ஆயிஷாவோ ஒருநிமிடம் அதிர்ச்சியாகிறார்.
பின்னர், நிலைமையை உள்வாங்கிக்கொண்டு, "நான் உங்களை இனி வாங்க போங்க என்றே அழைக்கிறேன்" என்று கூறுகிறார். அதனைத்தொடர்ந்து, இறுதியில் தன்னை அவர் தனிமையான இடத்தில் அமர்த்திக்கொண்டு கண்கலங்க, அவரின் பார்வை தூரத்தில் செல்லும் அசல் சிரித்தவாறு செய்கிறார். இதனால் இது பிக்பாஸ் கொடுத்த டாஸ்கா? அல்லது பிராங்கா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.