அட்ராசக்க.. சர்ச்சை நடிகைகளை குறிவைக்கிறதா பிக்பாஸ் சீசன் 6?.. போட்டியாளர் லிஸ்ட் கூட வந்துருச்சாமே..! புதிய தகவல் இதோ..!! 

அட்ராசக்க.. சர்ச்சை நடிகைகளை குறிவைக்கிறதா பிக்பாஸ் சீசன் 6?.. போட்டியாளர் லிஸ்ட் கூட வந்துருச்சாமே..! புதிய தகவல் இதோ..!! 


bigg boss season 6 contestents

ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி, தமிழில் விஜய் தொலைகாட்சி மூலமாக அறிமுகம் செய்யப்பட்டது. 5 சீசன் வரை நிறைவு செய்துள்ள தமிழ் பிக்பாஸ், 6 வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது . தமிழில் மக்கள் மத்தியில் பிக் பாஸ் என்றாலே அதிக எதிர்பார்ப்பு இன்று வரை நீடித்து வருகிறது. 

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 6 க்கான பரபரப்பு தொடங்கியுள்ள நிலையில், அதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். விஜய் தொலைக்காட்சியில் மட்டுமல்லாது ஹாட்ஸ்டாரிலும் பிக் பாஸ் சீசன் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தற்போது பிக் பாஸ் சீசன் 6 க்கான போட்டியாளர்கள் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. 

Bigg Boss 6

அதன்படி, டிடி என்ற திவ்விய தர்ஷினி, பாரதி கண்ணம்மா ரோஷினி, ராஜா ராணி 2 விழி ரிசானா, சர்ச்சை நாயகி ஸ்ரீநிதி, மனிஷா யாதவ், தர்ஷா குப்தா, ஷில்பா மஞ்சுநாதன், சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, வி.ஜே அஞ்சனா ஆகியோரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. ஆனால், இது அதிகாரபூர்வமானது இல்லை.