சினிமா பிக்பாஸ்

கவினின் மன்மத விளையாட்டு! உள்ளே சென்ற கஸ்தூரி செய்த காரியம்! இன்றைய ப்ரோமோ!

Summary:

Bigg boss season 3 Day47 promo

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏறக்குறைய 50 நாட்களை நெருங்கிவரும் நிலையில் முக்கோண காதல் கதை, சரவணன் திடீர் வெளியேற்றம், கஸ்த்தூரி என்ட்ரி என பல சுவாரசியமான விஷயங்களுடன் விறுவிறுப்பாக நகர்கிறது பிக்பாஸ் சீசன் 3.

பருத்திவீரன் சித்தப்பு சரவணன் பெண்களிடம் தப்பாக நடந்துகொண்ட காரணத்திற்காக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அவருக்கு பதில் நடிகை கஸ்த்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்துள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதில் இருந்து எல்லோரையும் கலாய்த்து வருகிறார் கஸ்த்தூரி, வெளியே நடந்த விஷயங்களையும் வைத்து பேசி வருகிறார். இன்று காலை வந்த புதிய புரொமோவில் கவினின் காதல் லீலைகள் குறித்து செமயாக கலாய்க்கிறார். இதில் கவினின் முகம் மாறுகிறது. இதோ அந்த வீடியோ. 


Advertisement