சினிமா பிக்பாஸ்

கதறி அழுத சாண்டி, கவின்! இப்படி ஒரு நாமினேஷன் இதுவரை நடந்தது இல்லை! வைரல் வீடியோ.

Summary:

Bigg boss sandi nominates kavin

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 70 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்ல போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் வீட்டை விட்டு யாரும் வெளியேறவில்லை.

இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷன் அணைத்து போட்டியாளர்களின் முன்னிலையில் ஓப்பனாக நடைபெறுகிறது. இதில் சாண்டி கவினையும், லாஷ்லியாவையும் நாமினேட் செய்கிறார். கவின் இந்த வீட்டிற்குள் வரும்போது எவ்வளவு ஜாலியா இருந்தான் என்பது எனக்கு தெரியும், ஆனால் இப்போது அவன் எப்படி கஷ்டப்படுகிறான் என்பதும் எனக்கு தெரியும்.

அவன் எனக்கு பழையபடி வேண்டும் என கூறி கவினை பார்த்து வீட்டைவிட்டு வெளியேபோட என சாண்டி அழுதுகொண்டே கூற அதுக்கு கவினும் சாண்டியை பார்த்து அழுகிறார். இதற்கு வழக்கம்போல தனது பாணியில் இருவரையும் திட்டுகிறார் வனிதா.


Advertisement