சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ்: அப்பா மகள் உறவில் ஏற்பட்ட முதல் விரிசல்! லாஷ்லியாவை முதன் முறையாக கத்திய சேரன்!

Summary:

Bigg boss lashliya seran fight

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. முக்கோண காதல் கதை, சரவணன் திடீர் வெளியேற்றம் இவற்றை அடுத்து வனிதாவின் ரீ என்ட்ரி இப்படி பிரச்சனைகளுக்கு பஞ்சமே இல்லாமல் பிக்பாஸ் சீசன் சர்ச்சையுடனும், விறுவிறுப்புடனும் செல்கிறது.

இந்நிலையில் வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு வெளியே அவர் பார்த்த விஷயங்களை உள்ளே கூற, அது பெரும் பூகம்பமாக வெடித்து வருகிறது. இதில் மதுமிதா தற்போது அனைவருடனும் சண்டையிட்டு வருகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் தர்ஷன் மற்றும் மதுமிதா இருவரையும் அழைத்து என்ன பிரச்சனை என்று கேட்டுக்கொண்டிருந்தார் சேரன்.

ஆரம்பத்தில் அமைதியாக பேசிக்கொண்டு இருந்த தர்ஷன் மற்றும் மதுமிதா. பின்னர் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் உள்ளே நுழைந்த லாஷ்லியா வனிதா வந்த பிறகுதான் இதைப்பற்றி பேசுறீங்க, அதற்கு முன்பு யாரும் பேசவில்லை என கூறுகிறார். அதற்கு சேரன் நான் பேசவில்லையா என லாஷ்லியாவிடம் கோவமாக கேட்கிறார். அதற்கு அவர் இல்லை என கூறுகிறார்.

இதனால் கடுப்பான சேரன், நான் கேட்கவில்லையா, நான் தான் கவினை முதலாக கேள்வி கேட்டேன் என்று லாஸ்லியாவை கத்த துவங்குவதும் லாஸ்லியா நான் உங்களை சொல்லவில்லை மதுமிதாவிடம்தான் கேட்டேன் என கூறுகிறார். இதுவரை அப்பா, மக்கள் உறவில் இருந்த இவர்கள் இடையே முதல் முறையாக விரிசல் ஏற்பட்டுள்ளது.
 


Advertisement