சினிமா Bigg Boss

ரம்யாவின் முகத்திரையை கிழித்தெறிந்த கேப்ரில்லா.. கொண்டாடும் ஆரி ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ..

Summary:

பிக்பாஸ் ரம்யா பாண்டியன் குறித்து கேப்ரில்லா பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக்பாஸ் ரம்யா பாண்டியன் குறித்து கேப்ரில்லா பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் நான்கு ஒருவழியாக இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 16 போட்டியாளர்கள், 2 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என 18 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 7 பேர் மட்டுமே விளையாடிவருகின்றனர்.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் குறித்து போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை தேர்வு செய்தபோது கேப்ரில்லா நடிகை ரம்யா பாண்டியனை தேர்வு செய்ததும், அதற்காக அவர் கூறிய கருத்துக்கள் தற்போது ஆரி ரசிகர்களிடையே செம வரவேற்பை பெற்று வைரலாகிவருகிறது.

ரம்யா, தனக்கு சம்பந்தமில்லாத இடத்தில் முன்வந்து தன்னுடைய கருத்தை வைப்பார். அதனை நான் பலமுறை பார்த்து இருக்கிறேன். அதிலும் அவர் தனக்கு நெருக்கமாக இருக்கும் நபருக்கு ஆதரவாக பேசுவார், அதிலும் அது ஆரிக்கு எதிராகத்தான் இருக்கும் என்று கூறியிருந்தார்.

தற்போது பாலாவுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் ரம்யா ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதால் கேபி கூறிய கருத்துக்கள் ரசிகர்களிடையே செம வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் ஆரிக்கு ஆதரவாக அவர் பேசியது ஆரி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement