
நம்பிக்கை துரோகம் பண்ணாதடா.. கொந்தளித்து கத்திய வனிதா! யாரை தெரியுமா? வைரலாகும் வீடியோ!!
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சண்டை சச்சரவு என சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டுள்ளது. நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கால் பிக்பாஸ் வீடே ரணகளமாக மாறியது.
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி போட்டியாளர்கள் தங்களை கவர்ந்தவருக்கு இதயம் கொடுக்க வேண்டும். இந்நிலையில் தங்களை பெரிதும் கவர்ந்ததாகவும், தங்களுக்கு அக்கா கிடைத்து விட்டதாகவும் கூறி பலரும் வனிதாவுக்கு இதயங்களை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் வனிதா தனது வாய்ப்பு வரும்போது பிடித்த நபராக தேர்ந்தெடுத்து தனக்கு கொடுக்கப்பட்ட இதயத்தை ஷாரிக்கிற்கு கொடுத்துள்ளார். அப்பொழுது அவர் நம்பிக்கை துரோகம் பண்ணாதடா என கூறியுள்ளார். அந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement