தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே இந்தியாவில் பெரிய சாதனை செய்த பிக்பாஸ் நிகழ்ச்சி! தமிழை ஓரங்கட்டிய தெலுங்கு!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே இந்தியாவில் பெரிய சாதனை செய்த பிக்பாஸ் நிகழ்ச்சி! தமிழை ஓரங்கட்டிய தெலுங்கு!


bigboss Trp No 1


இந்தியாவில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலேயே அதிக டிஆர்பி பெற்று தெலுங்கு பிக்பாஸ் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு பாராட்டு தெரிவித்து  நாகர்ஜுனா  ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது சினிமாக்களை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்க்கும் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அதற்கு முக்கிய காரணம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் தான். 

இதனால் தான் பல தொலைக்காட்சி நிறுவனங்களும் ரசிகர்களை கவரும் வகையில் புதிய புதிய நிகழ்ச்சிகளை போட்டி போட்டு ஒளிபரப்பி வருகின்றனர். சமீபத்தில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் ஒளிபரப்பினர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி அலுவலகங்கள், கல்லூரி என பொது இடங்களிலும் பிக்பாஸ் பற்றியே ரசிகர்கள் பேசிவந்தனர். 

 இந்தநிலையில் அண்மையில் தெலுங்கில் பிக்பாஸ் 3வது சீசனின் இறுதி நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்தியாவில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலேயே அதிக டிஆர்பி பெற்று தெலுங்கு பிக்பாஸ் முதல் இடத்தில் உள்ளது என்ற தகவலை இணையத்தில் பதிவு செய்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் நாகர்ஜுனா தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளார்.