மூட்டிவிட்டாச்சு.. பிக்பாஸ் கொடுத்த புதிய டாஸ்க்! தனலட்சுமிக்கு எதிராக கிளம்பிய போட்டியாளர்கள்! வைரல் வீடியோ!!

மூட்டிவிட்டாச்சு.. பிக்பாஸ் கொடுத்த புதிய டாஸ்க்! தனலட்சுமிக்கு எதிராக கிளம்பிய போட்டியாளர்கள்! வைரல் வீடியோ!!


Bigboss today promo Viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 6வது சீசன் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் முதல் வாரத்திலேயே சவாலான போட்டியாளராக திகழ்ந்து வந்த ஜி.பி முத்து தனது மகனை காணவேண்டும் எனக் கூறி தானாக வீட்டை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சாந்தி மாஸ்டர் எலிமினேட் ஆனார்.

மேலும் கடந்த வாரம் இரண்டாவது ஆளாக அசல் கோலார் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடி வருகின்றனர். தற்போது பிக்பாஸ் வித்தியாசமான டாஸ்க் ஒன்றை கொடுத்து போட்டியாளர்களுக்கிடையே மோதலை மூட்டியுள்ளார்.

அதாவது தனலட்சுமி எந்த குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என பிக்பாஸ் மற்ற போட்டியாளர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதில்களை கூறியுள்ளனர். போட்டியாளர்கள் கூறிய பதிலை கேட்டு தனலட்சுமி வேற லெவல் ரியாக்சன் கொடுத்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.