அட.. என்னதான்பா நடந்துச்சு! கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட ராஜு! அதுவும் யாரிடம் பார்த்தீர்களா! பரபரப்பு வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், ரணகளமாகவும் சென்று கொண்டுள்ளது. மேலும் ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் வித்தியாசமான டாஸ்குகளை கொடுத்து வருகிறார். இதன் மூலம் ஆரம்பத்தில் மிகவும் அமைதியாக, சாதுவாக இருந்த போட்டியாளர்கள் பலரும் தற்பொழுது தங்களது நிஜ முகங்களை காட்ட துவங்கியுள்ளனர்.
மேலும் கடந்த வாரம் ஐக்கி பெர்ரி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கிவந்தார். ஆனால் தற்போது அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கடந்த வார இறுதியில் அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ராஜு மற்றும் பாவனிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடரவே ஒரு கட்டத்தில் டென்சனான ராஜு கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்பு கேட்பது போல அங்கிருந்து நகர்கிறார். அதனைத் தொடர்ந்து பாவனி ராஜுவை குறை சொல்லி போட்டியாளர்களிடம் பேசுகிறார். இதனால் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு நிகழ்கிறது.
Advertisement
Advertisement