சினிமா

இவங்கதான் அப்படி இருக்காங்க! ஜெயிலுக்குள் அடைக்கப்பட்ட இரு போட்டியாளர்கள்! சோகத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு! வைரலாகும் வீடியோ!

Summary:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த போட்டியில் மக்களுக்கு நன்கு பரிச்சயமான பல பிரபலங்களும், சில புதுமுகங்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நாளுக்கு நாள்  வாக்குவாதங்கள், மோதல்கள், உற்சாகங்கள் என எதற்கும் குறைவில்லாமல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் நேற்று புதிய போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளிற்கான ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் வீட்டில் சுவாரசியமும், ஈடுபாடும் இல்லாத இருவரை தேர்வு செய்து சிறையில் அடைக்க வேண்டுமென பிக்பாஸ் கூறிய நிலையில், போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக ஜித்தன் ரமேஷ் மற்றும் ஷிவானியை தேர்வு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனால் ஷிவானி முகம் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.


Advertisement