வீடியோ

ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 4! எப்பொழுது தொடங்குகிறது? டீசர் இதோ!

Summary:

Bigboss season 4 telungu teaser released

பிக்பாஸ், ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பெருமளவில் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சி. இதற்கென ஏராளமான ரசிகர்கூட்டமே உள்ளது. இந்த நிகழ்ச்சி முதலில் இந்தியில்  தொடங்கப்பட்டது. மேலும் இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது. இவ்வாறு  பல  ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்துவந்த இந்த நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மற்றும் தெலுங்கிலும், அதனைத்தொடர்ந்து மலையாளத்திலும் ஒளிபரப்பபட்டது. 

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி  கோரத்தாண்டவமாடி வருகிறது.  இத்தகைய சூழ்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்தகைய கொரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லாமல் இருந்திருந்தால், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்திருக்கும். ஆனால் தற்போது பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்த நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனுக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் நிகழ்ச்சி தொடங்க உள்ளதாகவும் டீசர் வெளியாகி உள்ளது. இதனால் தெலுங்கு பிக்பாஸ் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனும், உற்சாகத்துடனும் உள்ளனர்.

 


Advertisement