ரைசாவின் காதலர் இவர்தானா? ப்பா.. என்னவொரு நெருக்கம்! புகைப்படத்தால் வயிறெரியும் நெட்டிசன்கள்!!

ரைசாவின் காதலர் இவர்தானா? ப்பா.. என்னவொரு நெருக்கம்! புகைப்படத்தால் வயிறெரியும் நெட்டிசன்கள்!!


bigboss-raiza-with-lover-photo-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற  பிக்பாஸ் முதல் சீசனிலேயே போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாடலிங் துறையை சேர்ந்த ரைசா வில்சன்.  இவர் ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர்  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே தனுஷ் நடிப்பில் வெளியான VIP 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

பின்னர் பிக்பாஸிற்கு பிறகு ஏராளமான படவாய்ப்புகள் வரத்துவங்கிய நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ரைசா தற்போது அலைஸ், காதலிக்க  யாருமில்லை, எஃப் ஐ ஆர், ஹேஷ்டாக் போன்ற படங்களில் பிஸியாக உள்ளார்.

   Raiza

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் ரைசா வில்சன் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் ஆண் நண்பர் ஒருவரின் மடியில் அமர்ந்து கட்டிக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் இவர்தான் ரைசாவின் காதலரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.