சினிமா

ஆரி கூறிய ஒற்றை வார்த்தை! கோபத்தின் உச்சிக்கு சென்று எகிறி வந்த பாலா! செம ஷாக்கில் போட்டியாளர்கள்!

Summary:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளிற்கான ப்ரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 , 85 நாட்களை கடந்து நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும்  சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா,சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா மற்றும் கடந்தவாரம் அனிதா சம்பத் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடையவுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் சண்டைகள், மோதல், வாக்குவாதங்கள் என சூடு பறக்க சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் இன்று ஆரி மற்றும் பாலா இருவரும் ஓய்வறையில் உள்ளனர். அப்பொழுது ஆரி பாலாவை பார்த்து சோம்பேறித்தனம் என்று கூறியுள்ளார்.

உடனே கோபத்தின் உச்சத்துக்கு சென்ற பாலா இங்கு எல்லாரும் அவங்கங்க உழைப்பை போட்டுகிட்டு இருக்கோம். இங்கு யாரும் சோம்பேறி கிடையாது என பயங்கர கடுமையாக பேசியுள்ளார். இதனால் ஆரி மற்றும் பாலாஜிக்கு இடையே கடுமையான மோதல் ஏற்படும் என கூறப்படுகிறது. இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  


 


Advertisement