#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
பிக்பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்களையும் கண்ணீர் சிந்தவைத்த புதிய டாஸ்க்! வைரலாகும் ப்ரமோ வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் உற்சாகங்கள், வாக்குவாதங்கள், சண்டைகள், சுவாரசியங்கள் என மக்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ஆஜித் குறைவான வாக்குகளைப் பெற்ற நிலையில், அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில், தன்னிடமிருந்த எவிக்ஷன் ப்ரீபாஸை வைத்து தப்பித்தார். இந்த நிலையில் இன்றைய நாளிற்கான முதல் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
#Day25 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/cubF0ahaWj
— Vijay Television (@vijaytelevision) October 29, 2020
அதில், நீங்கா நினைவுகள் யாரை ரொம்ப மிஸ் பண்றீங்க என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனை படித்தவுடனேயே கன்பெக்ஷன் அறையிலிருந்த அர்ச்சனா அழுதுவிட்டார். அதனைத் தொடர்ந்து தங்களது நினைவுகளை பகிர்ந்த ரம்யா, சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி என அனைத்து போட்டியாளர்களும் கண்கலங்கியுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.