என்னது! பிக்பாஸ் கவினுக்கு விரைவில் திருமணமா? பொண்ணு யார் தெரியுமா? தீயாய் பரவும் புதிய தகவல்!bigboss-kavin-marriage-news-spread

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருமளவில் பிரபலமாகி தனக்கென தனி ரசிகர்பட்டாளத்தை கொண்டவர்  நடிகர் கவின். ஆர்.ஜேவாக அறிமுகமான இவர் விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் சீரியலில் நடிக்கத் தொடங்கி பின்னர் விஜய் டிவியில் பிரபலமான சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

அதனைத்தொடர்ந்து கவினுக்கு பட வாய்ப்புகள் கிடைத்தநிலையில் இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். பின்னரே அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. மேலும் பிக்பாஸ் வீட்டில் அவர் அபிராமி, சாக்ஷி ஆகியோருடன் ரொமான்ஸ் மற்றும்  லாஸ்லியாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். ஆனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இருவரும் கண்டுகொள்ளவில்லை.

kavin

இந்த நிலையில் தற்போது நடிகர் கவினுக்கு திருமணம் என தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. அதாவது கவின் ஸ்டைலிஸ்ட் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இது உண்மைதானா என்பது குறித்து கவின் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.