சினிமா

பூகம்பமாய் வெடித்துள்ள தர்ஷன்- சனம் ஷெட்டி காதல் விவகாரம்! அடுக்கடுக்காக நறுக்கென கேள்வியெழுப்பிய பிக்பாஸ் பிரபலம்!

Summary:

bigboss kajal ask question to tharshan and sanam shetty

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் இலங்கையைச் சேர்ந்த மாடல் தர்ஷன். பல தமிழ்ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட இவர்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனாலும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. பிக்பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி.இவர் தர்ஷன்  பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த பொழுது அவருக்கு ஆதரவாக பல கருத்துக்களை தெரிவித்து வந்தார். மேலும் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அவர்கள் இருவரும் பல விருது விழாக்களில் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் சனம் ஷெட்டி  தர்ஷன் என்னை ஏமாற்றி விட்டதாகவும்,  எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது ஆனால் அவர் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பலரின் விவாதங்களுக்கு இரையானது. மேலும் இதனைத்தொடர்ந்து தர்ஷன் தனது முன்னேற்றத்தை அழிக்கப் பார்க்கிறார் என சனம் ஷெட்டியின் மீது குற்றம் சாட்டினார்

இந்நிலையில் பிக்பாஸ் 2 போட்டியாளரும், நடிகையுமான நடிகை காஜல் தனது ட்விட்டர் பக்கத்தில் தர்ஷன் மேலேயும் தப்பு இருக்கு சனம். நான் அதனை முழுசா ஒத்துக்குறேன். ஆனால் உனது உண்மையான நோக்கம் என்ன என்பது எனக்கு புரியவில்லை. நீங்கள் அவரிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறீர்களா? அல்லது அவரை கஷ்டப்படுத்த வேணுமா? எந்த லவ்வரும் விரும்பமாட்டாங்க நீங்க புரிஞ்சிப்பீங்கனு நம்புறேன் என அறிவுரை வழங்கி பதிவிட்டுள்ளார்.


Advertisement