சினிமா

முதல் நாளே.. தனது ஸ்டைலில் கோஷமிட்டு வீட்டையே அதிரவைத்த தொகுப்பாளினி பிரியங்கா! வைரலாகும் முதல் வீடியோ!!

Summary:

முதல் நாளே.. தனது ஸ்டைலில் கோஷமிட்டு வீட்டையே அதிரவைத்த தொகுப்பாளினி பிரியங்கா! வைரலாகும் முதல் வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வந்த பிக்பாஸ் சீசன் 5 நேற்று மாலை மிகவும் பிரம்மாண்டமாக துவக்கமானது. போட்டியாளர்களாக களம் இறங்கப் போவது யார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் பல புதுமுகங்கள் பிக்பாஸ் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

அதாவது பிக்பாஸ் சீசன் 5-ல் ஆடை வடிவமைப்பாளர் மதுமிதா, கானா பாடகி இசைவாணி,  விமர்சகர் அபிஷேக், சீரியல் நடிகர் ராஜு ஜெயமோகன், தொகுப்பாளினி பிரியங்கா, நடிகர் அபிநய் , நாட்டுப்புறப் பாடகி சின்னப்பொண்ணு, சீரியல் நடிகை பவானி ரெட்டி, மாடல் அழகி நதியா சாங், இமான் அண்ணாச்சி, நடிகர் வருண், ராப் பாடகி ஐக்கி பெரி, மாடல் அழகி அக்‌ஷரா ரெட்டி, மாடல் அழகி ஸ்ருதி ஜெயதேவன் நடிகர் நிரூப் நந்தகுமார், மாடல் அழகி நமீதா மாரிமுத்து, சிபி சந்திரன், நாடக கலைஞர் தாமரைச் செல்வி  உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்குபெறுகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள்  இந்த வாரம் தலைவர் பதவிக்கு ஐந்து பேர் எழுந்து நிற்கின்றனர்.
இதில் ராஜு தான் பாத்ரூம் பொறுப்பினை எடுத்துக்கொள்வதாக கூறுகிறார். அப்பொழுது தொகுப்பாளினி பிரியங்கா, நாங்க எல்லாம் ஒன்னானோம்... கக்கூஸ் கழுவி ப்ரெண்ட்டானோம் என்று தனது பாணியில் கோஷத்தை எழுப்பி போட்டியாளர்களை சிரிக்கவைத்து அதிர வைத்துள்ளார். 


Advertisement