ஓ.. இவர்தான் அவரது அம்மாவா! மேடையில் கதறி அழுத பிக்பாஸ் அபிஷேக்! வைரலாகும் எமோஷனல் வீடியோ!!

ஓ.. இவர்தான் அவரது அம்மாவா! மேடையில் கதறி அழுத பிக்பாஸ் அபிஷேக்! வைரலாகும் எமோஷனல் வீடியோ!!


bigboss-celebration-promo-video-viral-VF2RF2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் திரைப்பட விமர்சகரான அபிஷேக் ராஜா. அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தன் மீது கவனத்தை கொண்டுவர செய்த வேலைகள் மூலம் அவர் விமர்சனத்திற்கு ஆளானார். அதனை தொடரந்து அவர் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது வாரமே எலிமினேட் ஆனார்.

பின்னர் நிகழ்ச்சியின் விறுவிறுப்பை மேலும் அதிகரிக்க அபிஷேக் மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். ஆனாலும் அவர் மறுபடியும் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அபிஷேக் பல சர்ச்சைகளை சந்தித்தவர். 

இந்த நிலையில் விரைவில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அதன் ப்ரமோ வீடியோக்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளிவந்த வீடியோவில், அபிஷேக் தனது அம்மாவை உலகிற்கு அறிமுகம் செய்து அவரை குறித்து எமோஷனலாக பேசியுள்ளார். மேலும் மேடையிலேயே தனது அம்மாவை கட்டியணைத்து கதறி அழுதுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.