வாத்தி கம்மிங்.! பைக்கில் செம மாஸாக என்ட்ரி கொடுத்த ஆரி! இணையத்தில் லீக்கான கொண்டாட்ட வீடியோ!!bigboss-celebration-aari-entry-video-viral

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துபெருமளவில்  பிரபலமான ஆரி பிக்பாஸ் வீட்டில் மிகவும் நேர்மையாகவும் கண்ணியத்துடனும் இருந்தார். மேலும் சிறு விஷயங்களில் கூட மிகவும் பொறுப்புடன் இருந்தார். அதுமட்டுமின்றி போட்டியாளர்கள் அனைவரும் தன்னைப் போலவே இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்த்தார். அதனால் அவர் அடிக்கடி கோபப்பட பிக்பாஸ் வீட்டில் அனைவரும் அவருக்கு எதிராகவே இருந்தனர்.

ஆனாலும் ஆரிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. பிக்பாஸ் வெற்றியாளரான அவரை ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்பு வெற்றி கொண்டாட்டம் நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கான ஷூட்டிங் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

அப்பொழுது வெற்றியாளரான ஆரி செம மாஸாக வாத்தி கம்மிங் பாடல்  பின்னணியில் ஒலிக்க பட்டு வேட்டிசட்டையில் பைக்கில் ஆடியவாறு என்ட்ரி  கொடுத்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாக அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.