சினிமா

பிக்பாஸையும், கமல்ஹாசனையும் செம மோசமாக கழுவி ஊற்றியவர் இன்று பிக்பாஸ் போட்டியாளர்! வைரலாகும் வீடியோ!!

Summary:

பிக்பாஸையும், கமல்ஹாசனையும் செம மோசமாக கழுவி ஊற்றியவர் இன்று பிக்பாஸ் போட்டியாளர்! வைரலாகும் வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்களும் பல எதிர்ப்பினரும் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்களை கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் பிரம்மாண்டமாக துவக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏராளமான புதுமுகங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த சீசனையும் நடிகர் கமலே தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் பதினெட்டு போட்டியாளர்களுள் ஒருவராக யூ டியூப் மூலம் பிரபலமான விமர்சகர் அபிஷேக் ராஜா கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அபிஷேக் ராஜா பிக்பாஸ் குறித்தும், கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்த வீடியோவை தற்போது நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். அதில் அவர், ஊருக்கே தெரியும் உங்கள கேமரா வச்சி எடுத்துக்கிட்டு இருக்காங்கனு, ஆனால் கிடைச்ச 100 நாள்ல நீ தமிழ்நாடு CM ஆகணும்னு பண்ற வேலை இருக்கே முடியலடா என்று கலாய்த்து பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது பெருமளவில் வைரலாகி வருகிறது.


Advertisement