2023 ல் திரைக்கு வராமலேயே எதிர்பார்ப்பை கிளப்பிய திரைப்படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ.!
இனி ஒரு முறையும் என் நாவில் அந்த இருவர் பெயரும் வராது! சேரன் பரபரப்பு ட்வீட்!
இனி ஒரு முறையும் என் நாவில் அந்த இருவர் பெயரும் வராது! சேரன் பரபரப்பு ட்வீட்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொள்வதற்கு வயது ஒரு தடையில்லை என நிருபித்தவர் இயக்குனர் சேரன். அதிலும் 70 நாட்களுக்கு மேல் இருந்து சாதனையும் படைத்துள்ளார்.
இவர் வீட்டில் ஒரு போட்டியாளர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல அப்பாவாகவும் , அண்ணனாகவும், நண்பனாகவும் விளங்கியவர். அதில் லாஸ்லியாவை தனது சொந்த மகளாக பார்த்தார். அதனால் தான் அவர் மீது அக்கறையும், கண்டிப்புடனும் இருந்து வந்தார்.
தற்போது வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்களிடம் தனி தனியாக பேட்டிகள் வைக்கப்பட்டது. அதில் சேரன் கவின் - லாஸ்லியாவின் காதல் பற்றி பேசியிருப்பார். அதற்கு அவர்களது ரசிகர்கள் கோபப்பட்டுள்ளனர்.
இதனால் தற்போது சேரன் அவர்கள் கவின் - லாஸ்லியா ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த ட்வீட் வைரலாகி வருகிறது.
கவின் லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை.அவசியமுமில்லை.
— Cheran (@directorcheran) October 19, 2019
இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது. இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரீகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது.
என் ப்ரச்னைக்கு வரவேண்டாம்.