சினிமா

நடிகை பூமிகாவா இது! குடும்ப குத்து விளக்காக இருந்தவர் தற்போது இப்படி மாறிட்டரே! வைரலாகும் புகைப்படம்.

Summary:

Bhumika

2000 ஆம் ஆண்டில் யுவகுடு என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பூமிகா. அதனை தொடர்ந்து தெலுங்கில் அவரது இரண்டாவது திரைப்படம் குஷி. இது அவருக்குச் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது.

மேலும் இவர் தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் இந்தி திரைப்படம் 2003 இல் வெளியான தேரே நாம் ஆகும். தமிழில் அறிமுகமான திரைப்படம் பத்ரி ஆகும். தொடர்ந்து, ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் திருமணத்திற்கு பிறகு படவாய்ப்புகள் குறையவே சுய வேலை, குடும்பம் என செட்டில் ஆகினார். இந்நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்துள்ளார். 41 வயதாகும் பூமிகா தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஷாக்காகியுள்ளனர்.


Advertisement