இத்தோட நிறுத்திக்கோங்க!! வரம்புமீறி போகும் அவதூறு பேச்சுக்கள்! இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட ஆவேச அறிக்கை!

Bharathiraja condemned meera mithun


bharathiraja-condemned-meera-mithun

பிக்பாஸ் மீரா மிதுன் தமிழ் சினிமாக்களில் வாரிசு நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும்,  விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் நெபடிசம் தயாரிப்புகள் என மிகவும் மோசமாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மேலும் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் சூர்யாவின் மனைவி ஜோதிகா இருவரையும் தரக்குறைவான வார்த்தைகளால் அவதூறாக பேசியும் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனை கண்ட பலரும் கொந்தளித்து போனர். மேலும் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விஜய் ரசிகர்கள் போலீசில் புகார் அளித்தனர். 

இந்நிலையில் சமூக வலைதளங்களில் நடிகர்கள் குறித்த அவதூறுகள்  அதிகரித்துவரும் நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  நம் சக கலைஞர்களின் குடும்பத்தை அவதூறாக பேசியும் நடிகர் சங்கம் மட்டுமல்ல வேறெந்த சங்கமும் எதிர்த்து குரல் எழுப்பாமல் இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. யாரோ ஒருவரின் அவமானம்தானே நாம் ஏன் பேச வேண்டும் என எண்ணம் இருந்தால் நம் வீடு அசிங்கத்தால் அமிழ்ந்து போகும்.
அழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பதுபோல மீரா மிதுன் என்ற பெண் தன் வார்த்தைகளை கடிவாளம் போடாமல் வரம்புமீறி சிதறியுள்ளார்.


சிறு பெண், பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கவுரமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தைப் பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இதுவரை பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன்.சூர்யா எத்தனையோ பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்கும் பணி செய்கிறார். சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அப்படிப்பட்டவர்களை, அவர்களின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல.

மீரா வாழ்க்கை இன்னும் மிச்சம் இருக்கிறது. உழைத்து போராடி, எண்ணங்களை சீர் செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்கள். வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது. அடுத்தவரை தூற்றிப், பழித்து கோட்டை கட்டாதீர்கள். அது மண் கோட்டையாகதான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.