சினிமா

ப்பா.. கண்ணம்மாவா இது! ஆள் அடையாளமே தெரியாம வேற மாதிரி இருக்காரே! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மத்த

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் விறுவிறுப்புடன், சுவாரசியமாக ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

இந்த தொடரில் ஹீரோவாக பாரதி என்ற கதாபாத்திரத்தில் அருண், மற்றும் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் ரோஷினி ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களது நடிப்பு அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டு வருகிறது. பாரதிகண்ணம்மா தொடர் தற்போது நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கிளப்பி வருகிறது.

பாரதிகண்ணம்மா சீரியலின் மூலம் அறிமுகமான நடிகை ரோஷினி மாடலிங் துறையை சேர்ந்தவர். சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பார். இந்த நிலையில் அவர் தற்போது வித்தியாசமான ஹேர்ஸ்டைல் வைத்து எடுத்த போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் கண்ணம்மாவா இது என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


Advertisement