பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள்!

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள்!


bharathi-kannamma-actor-venkatesh-dead

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாரதி கண்ணம்மா. நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் சென்றுகொண்டிருக்கும் 
 இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

 இதில் பாரதி கதாபாத்திரத்தில்
அருண் பிரசாத்  என்பவர் நடித்து வருகிறார். மேலும் கண்ணம்மாவாக ரோஷினி  நடித்து வருகிறார். இத்தொடரில் கண்ணம்மாவின் அப்பாவாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ். ஏராளமான தொடர்களில் நடித்த அவர் தற்போது பாரதி கண்ணம்மா மற்றும் ஈரமான ரோஜாவே தொடர்களில் நடித்து வந்தார்

இந்நிலையில் நடிகர் வெங்கடேஷ் இன்று மதியம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சின்னத்திரை பிரபலங்கள் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.