சினிமா

விஜய் டிவி கண்ணமாவா இது..? புடவையிலேயே இப்படி ஒரு கிளாமரா..! புகைப்படத்தைக் கண்டு கிறங்கிப் போன ரசிகர்கள்!

Summary:

பாரதி கண்ணம்மா ரோஷினி புடவையில் கிளாமராக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சினிமாக்களை விட சீரியல்களுக்கே பெருமளவில் ரசிகர்களாக உள்ளனர். மேலும் பலர் சீரியல்களுக்கு அடிமையாகவே உள்ளனர் என கூறலாம். ஒருநாள் பார்க்கவில்லை என்றாலும் அந்த எபிசோட்டை இணையத்தில் தேடிப் பார்க்கும் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்தத் தொடர் சமீப காலமாக நாளுக்குநாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யத்தைக் கூட்டும் வகையிலும் உள்ளது. இத்தொடரில் கண்ணம்மாவாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் மாடல் நடிகையான ரோஷினி. 

பாரதி கண்ணம்மா தொடரில் சேலை கட்டி அடக்க ஒடுக்கமாக இருக்கும் ரோஷினி சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்க கூடியவர். அவ்வபோது வித்தியாசமான மாடர்ன்  புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இந்த நிலையில் அவர் தற்போது புடவையில் கிளாமராக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
 


Advertisement