சினிமா

வாவ்.. பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு! புகைப்படத்துடன் அறிவித்த பிரபலம்! குவியும் வாழ்த்துக்கள்!!

Summary:

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு! புகைப்படத்துடன் அறிவித்த பிரபலம்! குவியும் வாழ்த்துக்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பல அதிரடி திருப்பங்களுடன் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை கூட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் டாக்டராக, ஹீரோ பாரதியை ஒருதலையாக காதலித்து அவரை அடைய பல வில்லத்தனங்களை செய்யும் கொடூர வில்லியான வெண்பாவாக நடித்து வருபவர் பரீனா.

இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். மேலும் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஃபரீனா கடந்த 2017ஆம் ஆண்டு ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியையும் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி பரினா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகாமல் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த நிலையில், அவர் தற்போது தனக்கு மகன் பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

 

 


Advertisement