சினிமா

நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடிக்கும் பிரபல முன்னணி தமிழ் நடிகர்! வைரலாகும் புகைப்படம்.

Summary:

bharath salmankan

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் சங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பரத்.அதனை தொடர்ந்து நடிகர் பரத் 4 ஸ்டுடென்ட்ஸ், காதல், வெயில் படங்கள் மூலமாக தனக்கென தனி இடம் பிடித்தார்.

மேலும் இவர் மிக குறுகிய காலத்தில் வெற்றி தோல்வி என இரண்டையும் பார்த்துவிட்டார். இந்நிலையில் கடந்த 2013 இல் துபாயில் வளர்ந்த மலையாளி டென்டிஸ்ட் பெண்ணான ஜெஷ்லி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .இவர்களுக்கு அழகான இரட்டை குழந்தைகள் இருக்கின்றது. 

இந்நிலையில் தற்போது நடிகர் பரத் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபு தேவா இயக்கும் படமான ராதே என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். அதில் ஹுரோவாக நடிகர் சல்மான் கான் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் பரத் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியானது. 

salmankan க்கான பட முடிவு

ஆனால் தற்போது நடிகர் பரத் அது உண்மையில்லை என கூறியுள்ளார். மேலும் அந்த படத்தில் தான் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அந்த கதாபாத்திரம் நடிகர் சல்மான் கானுக்கு அருகில் பயணிக்கும் கதாபாத்திரத்திம் எனவும் கூறியுள்ளார்.


Advertisement