நானும் மனுஷன்தான்.. பீஸ்ட் பட பிரபல நடிகரின் அம்மா கேட்ட அந்த கேள்வி! அசத்தலாக பதிலளித்த தளபதி விஜய்!!



beast-actor-mother-questioned-to-vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவராக வலம்வரும் தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க,  நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்த படத்தில் மலையாள நடிகர் டாம் சாக்கோ  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் விஜய் குறித்தும், அவருடன் நடித்தது குறித்தும் டாம் சாம்கோ பகிர்ந்துள்ளார்.

beast

அவர் கூறியதாவது, நான் அதிகம் கோபப்படுவேன். அதற்காக எனது அம்மா என்னை அடிக்கடி கண்டிப்பார். இந்நிலையில் பீஸ்ட் பட ஷூட்டிங்கின் போது எனது அம்மாவை விஜயை சந்திக்க அழைத்துச் சென்றேன். அப்பொழுது அவரிடம் நான், விஜய் சார் கோபப்படவே மாட்டார். ரொம்ப அமைதியாக இருப்பார் எனக் கூறினேன்.

பின்னர் விஜய் சாரை சந்தித்த எனது அம்மா அவரிடம் உங்களுக்கு கோபமே வராதா? எனக் கேட்டார். அதற்கு அவர் நானும் மனுஷன்தானே. எனக்கும் கோபம் வரும். ஆனால் நான் வெளிக்காட்ட மாட்டேன். கட்டுப்படுத்திக் கொள்வேன் என்று கூறினார் என தெரிவித்துள்ளார்.