பாரதி கண்ணம்மா சீரியலில் புதிய அஞ்சலியாக நடிக்க உள்ளது இவர்தானா...! வெளியான புகைப்படம் இதோ...



Barathi kannamma serial new anjali charter

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடனும், நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒவ்வொரு நாளும் அதிரடி திருப்பங்களுடன் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. 

இந்த தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் மற்றும் புதிய கண்ணம்மாவாக வினுஷா தேவி என்பவர் தற்போது நடித்து வருகிறார். மேலும் இத்தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் கண்மணி மனோகரன். இந்நிலையில் அஞ்சலியாக நடித்து வந்த கண்மணி மனோகரன் தற்போது பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து வெளியேறி நிலையில்  அவருக்கு பதிலாக யார் நடிக்கப்போவது என இதுவரை  தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது ஜீ தமிழ்  தொலைக்காட்சியில் நினைத்தாலே இனிக்கும் சீரியல் புகழ் நடிகை அருள்ஜோதி தான் இனி பாரதி கண்ணம்மாவில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகா தகவல் வெளியாகி உள்ளது.

 

அவரது புகைப்படம் இதோ..