வாவ்.. செம கியூட்! லேட்டஸ்ட் சூப்பர் ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகர் பரத்தின் டுவின்ஸ் மகன்கள்!

வாவ்.. செம கியூட்! லேட்டஸ்ட் சூப்பர் ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகர் பரத்தின் டுவின்ஸ் மகன்கள்!


Barath sons dancing video viral

தமிழ் சினிமாவில் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். அதனைத் தொடர்ந்து அவர் விஷால் நடிப்பில் வெளிவந்த செல்லமே திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் அவர் காதல் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்தை தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வரதுவங்கியது. மேலும் அவர் சினிமா துறையில் முன்னணி இளம் நடிகராகவும் வலம் வந்தார். நடிகர் பரத் நடிப்பு மட்டுமின்றி நடனத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பரத் கடந்த 2013 ஆம் ஆண்டு தனது சிறுவயது தோழியான ஜெஸ்லி ஜோஸ்வா என்பவரை திருமணம் செய்துகொண்டார். 

அவர்களுக்கு ஆத்யன் மற்றும் ஜெய்தன் என இரட்டை ஆண்குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான நாட்டு நாட்டு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோவை பரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.