
Bangladesh girl deliver 3 babies in a year in different months
வங்கதேசத்தை சேர்ந்தவர் 20 வயது இளம் பெண் அரிபா சுல்தானா. 20 வயதாகும் இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் குல்னா மருத்துவக்கல்லூரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருக்கு சுகப்பிரசவம் மூலம் அழகான ஆண் குழந்தை ஓன்று பிறந்துள்ளது.
எல்லாம் நலமாக சென்றுகொண்டிருந்த நிலையில் குழந்தை பிறந்து 24 நாட்களில் சுல்தானக்கு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சுல்தானா வேறொரு மாவட்டத்தில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுல்தானாவை சோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், வயிற்றுக்குள் இரட்டை குழந்தைகள் இருப்பதாகவும், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதனை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் 24 நாட்களுக்கு முன்தான் குழந்தை பிறந்த சம்பவத்தை கூறியுள்ளனர். உடனே அல்ட்ரா ஸ்கேன் மூலம் மருத்துவர்கள் பரிசோதித்ததில் சுல்தானாவுக்கு இரண்டு கர்ப்பப்பை இருப்பதும், இரண்டு கர்ப்பப்பையிலும் குழந்தை உருவாகியிருப்பதும் தெரியவந்தது.
இதனை அடுத்து சிசேரியன் மூலம் இரட்டை குழந்தைகளை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர். தற்போது தாயும், மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ஒரே பெண்ணுக்கு இரண்டு கர்ப்பப்பை இருப்பதும், இரண்டு கர்ப்பப்பையிலும் குழந்தை உருவாகி பிரிந்திருப்பது இதுவே முதல் முறை என்றும், மருத்துவத்துறையில் இது மிகவும் அரிதான சம்பவம் எனவும் கூறியுள்ளனனர்.
Advertisement
Advertisement