தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
தலைவரு டாக் ஸ்பீடுல இருக்காரே.. திருமணம் முடிந்து ஹனிமூன் சென்றுள்ள கோபி - ராதிகா..! எங்கு தெரியுமா?.. வைரலாகும் போட்டோஸ்..!!
சின்னத்திரை ரசிகர்களால் விரும்பிபார்க்கப்படும் நெடுந்தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடர் தற்போது விறுவிறுப்பின் உச்சத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. முதலில் கோபியின் நிஜமுகம் அவரது குடும்பத்திற்கு தெரியவந்த நிலையில், தற்போது ராதிகாவை திருமணம் செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து கோபியின் தந்தை, ஈஸ்வரி மற்றும் கோபியின் மகளிடம் கூறவே அனைவரும் திருமணத்தை நிறுத்துவதற்காக மண்டபத்திற்குள் நுழைகின்றனர். இதன்பின் அவர்களது திருமணம் நடைபெறுமா? என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருமணத்தை முடித்த கோபி ஹனிமனுக்காக கொடைக்கானல்
சென்றிருப்பது தெரியவருகிறது.
கொடைக்கானலில் சீரியல் குழுவினர் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகிய நிலையில், ரசிகர்கள் திருமணம் முடிந்து ஹனிமூன்தான் என்று உறுதிசெய்துள்ளனர். மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் - பாக்கியலட்சுமி குடும்பம் மெகாசங்கம காட்சிகளும் இடம்பெற உள்ளனவாம்.