பாக்கியலட்சுமி சீரியலில் சிடுசிடுனு இருக்கும் கோபியின் மனைவியை பார்த்துருக்கீங்களா! அவரும் சினிமாவில் நடிச்சுருக்காராமே!!bakyalakshmi-actor-sathish-wife-photo-viral

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இவ்வாறு ஒரு குடும்பப் பெண்ணின் கதையை எடுத்துரைக்கும் வகையில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடருக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

பாக்கியலட்சுமி தொடரில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கிய அவர் தொடர்ந்து  புகைப்படங்கள் மற்றும் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை வெளியிடுவது என செம பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சதீஷ் தற்போது தனது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். நடிகர் சதீஷின் மனைவியின் பெயர் கீதா விஜயன். அவரும் மலையாள சினிமாவில் நடித்துள்ளாராம். இந்த நிலையில் தனது மனைவியை குறித்து உருக்கமாக அவர் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.